அரசியலமைப்பு ஏற்பாடுகள்
• அடிப்படை உரிமைகள்: இலங்கை அரசியலமைப்பின் அரசியலமைப்பு 13, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விடயத்துடன் தொடர்பான வாழ்வதற்கான மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது.
வழக்கமான சர்வதேச மனிதாபிமான சட்டம்
• சூழ்நிலை: மோதலின் போது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் ஜெனீவா உடன்படிக்கையின் ஒரு திறத்தவராக இலங்கை கட்டுப்பட்டுள்ள சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் (IHL) மீறல்களாக வகைப்படுத்தப்படலாம்.
இலங்கையின் தண்டனைச் சட்டம்
• கடத்தல் மற்றும் தவறான தடுப்புக்காவலுடன் தொடர்புடைய பிரிவுகள்:
• பிரிவு 355: கடத்தல் குற்றத்தை வரையறுத்து தண்டனையை பரிந்துரைக்கிறது.
• பிரிவு 358: காணாமலாக்கப்படுவதுடன் தொடர்புபடுத்தக்கூடிய தவறான தடுப்புக்காவலைக் கையாள்கிறது.
வலிந்து காணாமலாக்கப்படுவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனம் (ICPED)
• கையெழுத்திடல்: இலங்கை மே 25, 2016 அன்று ICPEDஐ அங்கீகரித்தது.
• கடப்பாடுகள்: பிரகடனமானது வலிந்து காணாமலாக்கப்படலை தடுக்கவும், தண்டிக்கவும், யாரும் இரகசிய தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யவும் திறத்துவ நாட்டைக் கட்டாயப்படுத்துகிறது.
2018 ஆம் ஆண்டின் 5ம் இலக்க வலிந்து காணாமலாக்கப்படுதலில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனம்
• குறிக்கோள்: இந்தச் சட்டம் உள்நாட்டு சட்டத்தில் ICPED இன் ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கிறது.
• குற்றமாக்கல்: இலங்கைச் சட்டத்தின் கீழ் வலிந்து காணாமலாக்கப்படுவது ஒரு குற்றவியல் குற்றமாக ஆக்கப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
• பொறுப்புக்கூறல்: இது வலிந்து காணாமலாக்கப்படுதல்களுக்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதையும் சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை வழங்குவதையும் கட்டாயப்படுத்துகிறது.
2018 ஆம் ஆண்டின் 34ம் இலக்க இழப்பீடுகளுக்கான அலுவலக சட்டமூலம்
• குறிக்கோள்: மோதல்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் பிற கடுமையான தீங்குகளால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இழப்பீடுகளுக்கான அலுவலகத்தை நிறுவுகின்றது.
• செயற்பாடுகள்: தகுதியான பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிதல், இழப்பீட்டுத் திட்டங்களை (நிதி இழப்பீடு, மறுசீரமைப்பு, உள-சமூக ஆதரவு) அமுல்படுத்துதல் மற்றும் போதுமான மற்றும் வினைத்திறனான இழப்பீடுகளை உறுதிசெய்ய அரசாங்கத்திற்கு கொள்கைப் பரிந்துரைகளை வழங்குதல்.
2016 ஆம் ஆண்டின் 14ம் இலக்க காணாமலாக்கப்பட்ட நபர்களுக்கான அலுவலக (OMP) சட்டமூலம்
• குறிக்கோள்: இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடுவதற்கும் அவர்களைக் கண்டறிவதற்கும் நிரந்தரமான மற்றும் சுயாதீனமான அமைப்பான காணாமலாக்கப்பட்ட நபர்களுக்கான அலுவலகத்தை நிறுவுகிறது.
• செயற்பாடுகள்: காணாமலாக்கப்பட்டவர்களின் வழக்குகளை விசாரணை செய்தல், இழப்பீடுகளுக்கு பரிந்துரை செய்தல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல்.
1996 ஆம் ஆண்டின் 21ம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) சட்டமூலம்,
• ஆணை: HRCSL ஆனது வலிந்து காணாமலாக்கப்படல் உட்பட மனித உரிமை மீறல்களை விசாரணை செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக பணியாற்றுகின்றது.
• அதிகாரங்கள்: ஆணைக்குழு முறைப்பாடுகளை விசாரிக்கலாம், சாட்சிகளை வரவழைக்கலாம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தலாம்.
2010ம் ஆண்டின் 19ம் இலக்க இறப்பு பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம்
• குறிக்கோள்: இந்தச் சட்டமானது காணாமல் போன அல்லது காணாமல் போனதாகக் கூறப்படும் நபர்களின் அனுமானத்தின் அடிப்படையிலான இறப்பைப் பதிவு செய்ய அனுமதிக்கிறது.
• விளைவுகள்: இது காணாமல் போனவர்களின் குடும்பங்கள் சட்ட மற்றும் நிர்வாக விடயங்களைத் தீர்ப்பதற்கு உதவுகிறது, இருப்பினும் இது பொறுப்புக்கூறல் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது.
2015 ம் ஆண்டின் 4ம் இலக்க குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம்
• குறிக்கோள்: குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு சட்டப் பாதுகாப்பு மற்றும் உதவிகளை வழங்குதல், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் பழிவாங்கும் அச்சமின்றி சட்ட மற்றும் இழப்பீட்டு செயன்முறைகளில் அவர்கள் பங்கேற்பதை ஊக்குவித்தல்.
• செயற்பாடுகள்: பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளங்கள் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கான ஒரு கட்டமைப்பை நிறுவுகிறது, குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் உதவி மற்றும் பாதுகாப்புப் பிரிவினை உருவாக்குகிறது, மேலும் இழப்பீட்டு செயன்முறைகளில் பங்கேற்பவர்கள் உட்பட சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைப் பாதுகாக்க சட்ட அமுலாக்க மற்றும் நீதித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துகிறது.
Share