“மகன் பெயர் முதித்த  கலன்சூரிய. 21 வயது. உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மகனுக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தது. அதனால் தான் அவர் இராணுவத்தில் சேர்வது பற்றி எங்களிடம் பல்வேறு விஷயங்களைக் கூறினார், ஆனால் நாங்கள் அவருடன் அதைப் பற்றி பேசவில்லை” என்று திருமதி காந்தி கலன்சூரிய கூறினார்.

காணாமல் போன இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்களின் அமைப்பின் செயற்பாட்டாளர் காந்தி கலன்சூரிய, அதன் தலைவர் விஷாகா தர்மதாச மற்றும் ஏனைய தாய்மார்கள் தந்தையர்களுடன் இணைந்து பிள்ளைகளைத் தேடும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

தன் மகனை அறிமுகப்படுத்தி மேலும் கூறினார்: “என் மகன் அக்டோபர் 24, 1974 இல் பிறந்தான். அவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். நாங்கள் விரும்ப மாட்டோம் என்று தெரிந்தும் ரகசியமாக ராணுவத்தில் சேர விண்ணப்பித்திருந்தான். ஒரு வாரத்தில் மகன் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டான். பின்னர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டான். இரண்டு பயிற்சிகளும் 1996 இல் முடிவடைந்தன. அந்த பயிற்சிகள் முடிந்த பிறகு, அவன் செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினான். மே மற்றும் ஜூன் மாதங்களில் வீட்டிற்கு திரும்பினான். மகன் சிங்க ரெஜிமெண்ட் படையில் இருந்தான்.”

“எங்களுக்குத் தெரிந்தவரை, மகன் ‘சத் ஜெயா ஆபரேஷன்’-ல் ஈடுபட்டார். கிளிநொச்சியை மீளக் கைப்பற்றும் இராணுவத்தின் முயற்சியே அது. ஆனையிறவில் இருந்து ஏ 9 வீதி வழியாக வந்த இராணுவம் செப்டம்பர் இறுதியில் கிளிநொச்சியைக் கைப்பற்றியது. செப்டம்பர் 30, 1996 வாக்கில், மகனிடமிருந்து எந்த செய்தியும் இல்லாதபோது, ​​​​அவர் ரெஜிமென்ட்டை தொலைபேசியில் அழைத்தார். எனினும் மகன் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

மகன் காணாமல் போனது குறித்து மகனின் படைப்பிரிவு கூட தெரிவிக்கவில்லை. சிறிது நேரமாகியும் மகன் வீட்டிற்கு வராததாலும், அழைப்பு வராததாலும், பிறகு மனதிற்குள் நினைத்துக் கொண்டு, பார்க்க சென்றோம். ஆனால் அப்போது மகன் வரவில்லை என்று ரெஜிமென்டில் கூட கூறவில்லை. எனது உறவினரான மற்றுமொரு ஜெனரல் ஒருவர் இருக்கிறார். அவர், நாம் சிறிது காலம் பார்ப்போம் என்று கூறினார். மகன் எங்கிருந்தாவது  வருவான் என்றார். தேடுவோம் என்று ரெஜிமென்ட் சொன்னாலும் அது நடக்காது என்பதை உணர்ந்தோம். நாமே கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தோம்.

“இராணுவத்தில் உள்ள எனது மகனின் நண்பர்கள் இருவர், நடவடிக்கையின் போது எனது மகனைச் சந்தித்ததாகக் கூறினர். மகன் கூறியுள்ளார், பட்டாலியனை விடமாட்டேன், அதனால் நான் இங்கே இருக்கிறேன், முடியுமானவர்கள் யாராவது தப்பித்து செல்லுங்கள் என்று. பரன்னத் பகுதியில் கடுமையான மோதல்கள் நடந்தன. மகனுடன் இருந்த அதிகாரி ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரும் முதித்தை பார்த்ததாக சொன்னார்.

மகன் ராணுவ நேர்முகப்பரீட்சைக்கு தனது வகுப்பு ஆசிரியரை அம்மா என்று கூறி அழைத்து சென்றிருந்தான். ஆசிரியர் இன்றும் கூறுவார் இவன் எனக்கு செய்த செயலை பாருங்கள் என்று. அவர்களில் சம்பந்தப்பட்ட அதிகாரி , அம்மா கையெழுத்து வைக்காததால் வருவார்களா என்று கேட்டுள்ளார். அப்பா கையெழுத்து போட முடியாது என்றார். அதற்கு மகன் கூறினார்,வேண்டுமானால் கையெழுத்து போட இன்னொரு தந்தையை தேடிக்கொள்ள முடியும் என்று. தந்தை தொழிலதிபராக பணிபுரிந்தார். அவர் தனது மகனை வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுத்த விரும்பினார். மகன் இறந்த பிறகு, மகள் அவர்களை கட்டுப்படுத்துகிறாள். அவைகளை பார்த்துக் கொள்கிறாள்.

எங்களுக்கு மகன் இருப்பதாகவே உணரப்பட்டது. என் மகன் வருவான் என்று 2009 வரை காத்திருந்தேன். எங்களை போல ஜோதிடம் கேட்காதவர்கள்   யாரும் இருக்க முடியாது இலங்கையில் . நாங்கள் இலங்கை முழுவதும் சுற்றி வந்தோம். வடகிழக்கில் ஆயிரக்கணக்கான பலூன்களை ஊதி விவரங்களுடன் அனுப்பி வைத்தோம். மல்கம் ரஞ்சித் கர்தினால்கள் உள்ளிட்ட மதத் தலைவர்களுக்கு அறிவித்து அனுப்பினோம்.

பிள்ளை இல்லை என்று தோன்றவில்லை. என்ன நடந்தாலும் மகன் எங்காவது இருப்பான் என்று நினைத்தேன். பல்வேறு மத பழக்க வழக்கங்களில் இருந்து நிவாரணம் தேடினோம். சிங்கள புத்தாண்டுக்கு கூட நாங்கள் எதுவும் செய்யவில்லை. என் மகனின் நண்பர்கள் வந்து பல்வேறு விஷயங்களைச் சொல்லி எங்கள் மனதைத் தேற்ற முயன்றார்கள். அவரது சிறந்த நண்பர். அவனுடைய புத்தகங்களை எடுத்து படித்து, பல்கலைக்கழகத்திற்கு சென்ற நண்பர்சில காலம் எங்களை வந்து பார்த்து சென்றார்.”

‘பின்னர் சகோதரிகளின் நடவடிக்ககைகளுக்கு கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. மகன் காணாமல் போகும்போது இளைய மகள் சாதாரண தர பரீட்சைக்கு தயாரானாள்.’

யுத்தம் நிறைவடைந்த பின்னர் காணாமல் போன இராணுவத்தினரின் உறவினர்கள் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்குச் சென்று காணாமல் போன தமது உறவினர்களைத் தேடினர். “2009க்குப் பிறகு நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் அந்தப் பகுதிகளுக்குச் சென்றோம். முகாம்களுக்குச் சென்றோம். தகனம் செய்யப்பட்ட இடங்களுக்குச் சென்றோம். ஆனால் எங்களுக்கு ஒரு துப்பு கூட கிடைக்கவில்லை. பெல்ட் துண்டுகள், பர்ஸ் துண்டுகள் போன்ற பொருட்கள் இருந்தன. ஆனால் அடையாளம் காணக்கூடிய வகையில் எதுவும் இல்லை.”

காணாமல் போனவர்களின் பல நெருங்கிய உறவினர்களைப் போலவே, திருமதி காந்தி கலன்சூரியாவும் தனது மகனை மீண்டும் பார்ப்பார் என்ற நம்பிக்கையை கைவிடவில்லை. “எங்கள் மகனுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம். நான் இதுவரை எந்த மதச் சடங்குகளையும் செய்யவில்லை. எனது உறவினர்கள் இதுபோன்ற செயல்களைச் செய்தாலும், நான் அவற்றைச் செய்யவில்லை. எனது மகனின் பிறந்தநாளில் மட்டுமே நான் மத சடங்குகளை செய்கிறேன்.

இதையும் படியுங்கள்: பேரழிவுகளில் இருந்து சமூகங்களை குணப்படுத்துவதற்கான ஒரு விரிவான அணுகுமுறை