1980களின் பிற்பகுதியில், இலங்கையின் தற்போதைய ஆளும் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (பொதுவாக ஜே.வி.பி. என்று அழைக்கப்படுகிறது) அரசாங்கத்துக்கு எதிராக வன்முறையுடன் கூடிய ஒரு எழுச்சியை முன்னெடுத்தது. இந்த காலகட்டத்தில், கொலைகள் பரவலாக இடம்பெற்றன, மேலும் கிளர்ச்சியாளர்களுடன் தொடர்புடையதற்கான எந்த ஆதாரமும் இல்லாமல், இளைஞர்கள் அடிக்கடி குறிவைக்கப்பட்டனர்.
நயனா பிரியாமினி அந்த நேரத்தில் ஒரு இளம் பெண். அம்பலாந்தோட்டை, மனஜ்ஜவாவில் தனது தாய், இரண்டு மாமாக்கள் மற்றும் இரண்டு அத்தைகளுடன் வசித்து வந்தார். ஜேவிபியுடன் தொடர்பிருந்த அவளது மூத்த மாமா ஏற்கனவே கிராமத்தை விட்டு வெளியேறி விட்டார். அவளது இளைய மாமா மீன் வியாபாரியாக வேலை செய்து வந்தார். 1988 ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று, அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மருத்துவமனை சவக்கிடங்கில் அவரது உடலை குடும்பத்தினர் பார்த்தனர். ஆனால், அவர்களின் உடலோ அல்லது இறப்பு சான்றிதழோ அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இறந்தபோது அவருக்கு வயது 28 மட்டுமே. மற்றைய மாமா பின்னர் ஒரு புனர்வாழ்வு மையத்தில் சரணடைந்தார், இன்று உயிருடன் உள்ளார்.