நிலாந்தினி திம்புலாகல சொருவில கிராமத்தில் பிறந்தவர். இவரது தந்தை சிங்களவர் , தாய் தமிழ்ப் பெண். நிலாந்தினிக்கு பத்து வயது இருக்கும் போது, அவரது தந்தை ஒரு தீவிரவாத அமைப்பால் கடத்தப்பட்டார். குடும்பத்தில் நான்கு பேர் இருந்தனர், அனைவரும் தந்தையைத் தேடினர், ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தந்தை இல்லாததால், அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டது. குழந்தைகளின் பள்ளி பயணங்களும் தடைபட்டன. காலம் செல்லச் செல்ல, ஒரு நாள் தந்தை யாழ்ப்பாணத்தில் இருப்பதைக் கடிதம் மூலம் அறிந்து கொண்டனர். பின்னர் குழந்தைகளுடன் யாழ்ப்பாணம் சென்ற நிலாந்தினியின் தாயார் பல சிரமங்களுக்கு பின்னர் தந்தையைக் கண்டுபிடிக்க முடிந்தது.
நிரந்தர வருமானம் எதுவும் இல்லாத அவர்கள் மிகவும் கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் கிளிநொச்சியில் தற்காலிகமாக குடியேறினர். தற்போது போர் தீவிரமடைந்து வருகிறது. பொருளாதார சிக்கல்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் அழுத்தம் காரணமாக, அவர் தனது 25 வயதில் பாதுகாப்புக்காக திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் மட்டக்களப்பில் பிறந்தாலும், அப்போது யாழ்ப்பாணத்தில் வசிப்பவராக இருந்தார். சாப்பாடு மிகவும் அரிதாக இருந்த அந்தக் காலத்தில், அவரது கணவர் உணவு தேடிச் சென்றபோது காணாமல் போனார். நிலாந்தினி தற்போது கர்ப்பமாக உள்ளார். அவர்கள் அவரை எல்லா இடங்களிலும் தேடினார்கள், ஆனால் அவர் எங்கே என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில், நிலாந்தினி மற்றும் முழு குடும்பமும் வவுனியாவில் உள்ள அனாதை முகாமுக்கு அனுப்பப்பட்டனர். அவளது தாயும் அங்கேயே இறந்து போனாள்.
சுமார் ஐந்து மாதங்கள் முகாமில் வாழ்ந்த பின்னர் அவர்கள் சொந்த கிராமமான திம்புலாகலையில் மீள்குடியேற்றப்பட்டனர். தற்போது திம்புலாகல, சொருவில கிராமத்தில் பெரும்பான்மையான பெண்கள் விதவைகளாக உள்ளனர். தொடக்கத்தில், விகாரைகள் , கோயில்கள் மற்றும் பிற அமைப்புகளிடமிருந்து உணவு உதவிகளைப் பெற்றனர். பிற்காலத்தில் மீன்பிடித்தல், கரும்பு வெட்டுதல் மற்றும் இதர கூலித் தொழிலில் ஈடுபட்டார்கள். இதற்கிடையில், செஞ்சிலுவைச் சங்கத்தில் நிலாந்தினி உட்பட எட்டு பேருக்கு தற்காலிக வேலை கிடைத்தது.
அந்த வேலையில் அவள் சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் வரையில் சம்பாதித்தாள். ஆடைகள் தைக்கும் திறமை உள்ளதால், அந்த பணத்தில் தையல் இயந்திரம் வாங்கி, வாழ்வதற்காக ஆடைகளை தைக்க ஆரம்பித்தார் நிலாந்தினி.
தந்தை மற்றும் மகளுடன் வாழ்ந்து வரும் நிலாந்தினியின் ஒரே எதிர்பார்ப்பு, தன் மகளுக்கு நல்ல கல்வியை அளித்து, அவள் வாழ்க்கையை அதிர்ஷ்டமாக்க வேண்டும் என்பதுதான். கணவன் இல்லாத பெண்களை மத மற்றும் பிற சடங்குகளில் இந்து சமுதாயம் ஒதுக்கி வைப்பது குறித்து அவர் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார்.
கிறிஸ்டி ஷெல்டன் பெர்னாண்டோ’