இலங்கை 2002 ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) இடையிலான போர் நிறுத்தத்தை அனுபவித்துக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில், புலிகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உத்தியோகபூர்வமற்ற நிர்வாகப் பகுதிகளைக் கட்டுப்பாட்டில் கொண்டிருந்ததுடன், அங்கு அவர்கள் தங்களது சொந்த காவற்துறை, நீதிமன்றங்கள் மற்றும் சிவில் நிறுவனங்களை செயற்படுத்தினர். அவை சில ஆய்வாளர்களால் தமிழ்ப் புலிகளின் ‘உத்தியோக பற்றற்ற அரசு’ என்று அழைக்கப்பட்டன. போர்நிறுத்தமானது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் ஊடாக முன்னராக மூடப்பட்ட வீதிகளை மீண்டும் திறக்க அனுமதித்ததுடன், தெற்கிலிருந்து வடக்கிற்கும் வடக்கிலிருந்து தெற்கிற்கும் ஏ-9 வீதியில் பயணிக்க முடிந்தது. எவ்வாறாயினும், இந்த பகுதிகளுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் வாகனங்களையும் பயணிகளையும் புலிகளும் அரசாங்கப் படைகளும் கடுமையாக சோதனையிட்டன.
ஓகஸ்ட் 18, 2002 அன்று, களுத்துறை மாவட்டத்தின் மொரந்துடுவவினைச் சேர்ந்த சாரதியான இந்திக பெரேரா, முப்பது யாத்திரிகர்களைக் கொண்டு யாழ்ப்பாணம் நோக்கிப் பயணமாகப் புறப்பட்டார். அவர் ஓட்டி வந்த பேருந்தானது மொரந்துடுவவினைச் சேர்ந்த K.A.A. வசந்தவிற்கு சொந்தமானதுடன் அதன் நடத்துனர் வசந்தவின் சகோதரரான சமிந்த ஆவார்.
அன்று மாலை 5 மணியளவில் ஓமந்தை சோதனைச் சாவடி வழியாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அவர்கள் நுழைந்தபோது, வாயில் அன்றைய தினம் மூடப்பட்டு மறுநாள் காலைதான் திறக்கப்படும். ஏ-9 வீதி பாரியளவில் சேதமடைந்துள்ள நிலையில், புலிகளின் காவற்துறையினர் அதிகபட்ச வேக எல்லையாக மணிக்கு 30 கிலோமீற்றர் என விதித்திருந்தனர். முறிகண்டியின் வெறிச்சோடிய பகுதிக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த வானின் மீது இந்திகவின் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்திகவின் கூற்றுப்படி, இந்த மோதலில் வேனில் இருந்த பயணிகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதுடன், இதில் ஒரு சிறு குழந்தையின் தலையில் பலத்த உயிராபத்தான காயம் ஏற்பட்டதுடன், பின்னர் அக்குழந்தை காயங்களால் இறந்து.
அவ்வழியாகச் சென்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வாகனம் காயமடைந்தவர்களுக்கு உதவியது. பேருந்தும் பயணிகளும் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, புலிகளின்’ காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திக மீண்டும் விபத்து நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அங்கு விடுதலைப் புலிகளின் காவற்துறை சார்ஜன்ட் விசாரணை நடாத்தினார். யாத்ரீகர்களுக்கு ஒரு மண்டபத்தில் உணவு, பானங்கள் மற்றும் தங்குமிடங்கள் வழங்கப்பட்டு, மறுநாள், புலிகள் அவர்களை தெற்கு நோக்கிச் செல்வதற்காக ஓமந்தை சோதனைச் சாவடிக்கு கொண்டு சென்று விட்டனர். எவ்வாறாயினும், சாரதி இந்திக தடுத்து வைக்கப்பட்டதுடன், நடத்துனர் சமிந்த மூன்று நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் நல்ல முறையில் நடத்தப்பட்டதாக இந்திக தெரிவித்தார்.
பஸ் உரிமையாளர் கிளிநொச்சிக்கு சென்று இந்திகவை விடுவிக்க முயற்சித்தார், ஆனால் புலிகளின் காவற்துறையினர் இந்திகவை விடுதலைப் புலிகளின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை ஓகஸ்ட் 27 அன்று நடைபெற்றதுடன், இந்திகவை பிரதிநிதித்துவப்படுத்தி வழக்கறிஞரான மேலவர் ரூபா. 200/- கட்டணத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் நீதிமன்ற அமர்வில் கலந்து கொண்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தேசிய அமைப்பாளரான W.G.V. சில்வா அவர்களின் சார்பில் ஆஜரானார்.
மணியார்த்தனம் என்று அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் நீதிபதி, இந்திகவுக்கு ரூபா. 100,000 மற்றும் மேலதிகமாக பேருந்தை விடுவித்தமைக்காக ரூபா. 50,000 அபராத்தை விதித்தார்.
மே 2009 இல் போரின் இறுதிக் கட்டம் வரை, புலிகள் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உத்தியோகபூர்வமற்ற நிர்வாகத்தை பேணியதுடன், அவர்களுக்கு சொந்தமான பகுதியளவான அரச நிறுவனங்கள், இராணுவம், காவற்துறை மற்றும் நீதித்துறையை செயற்படுத்தினர். இலங்கை அரசாங்கத்துடனான உள்ளூர் மக்களின் தொடர்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதுடன், காலப்போக்கில், புலிகளின் நிர்வாகம் உள்ளூர் நிர்வாகத்தின் ஒரு வடிவமாக பார்க்கப்பட்டது. இந்த அதிகாரமானது விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட காவற்துறை அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் உட்பட பல்வேறு வகிபாகங்களுக்கு தனிநபர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் நீட்டிக்கப்பட்டது. போருக்குப் பின்னர், இந்த வகிபாகங்களில் பணியாற்றியவர்கள் அல்லது LTTE நிர்வாகத்துடன் ஒத்துழைத்தவர்கள் பெரும்பாலும் பொறுப்புக் கூற வேண்டியேற்பட்டதுடன், சில சமயங்களில் உயிரிழக்கவும் நேரிட்டது.
இந்த நிகழ்வுகள் இலங்கையின் வரலாற்றில் ஒரு சிக்கலான அத்தியாயத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதால், அவற்றைப் பிரதிபலிப்பது அவசியமாகும்.
(கெஸ்பாவவில் இருந்து சஞ்சீவ ரத்நாயக்க வழங்கிய தகவல்களின் அடிப்படையிலும் ஓகஸ்ட் 11, 2024 திகதியிடப்பட்ட லங்காதீப பத்திரிகையில் வெளியான ஸ்ரீநாத் பிரசன்ன ஜயசூரியவின் கட்டுரையிலிருந்து தொகுக்கப்பட்டது)