1990ல், 27 வயதான எச்.கே. ஹீன்ஹாமி, மூன்று குழந்தைகளின் தாயாக, வலஸ்முல்ல பகுதியில் உள்ள போவலயில் வாழ்ந்தார். அந்த ஆண்டு ஜனவரி 13ம் தேதியில், தினசரி கூலித்தொழிலாளியான அவரது கணவர் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பவில்லை. நிகழ்ந்து கொண்டிருந்த மோதலின் இரு தரப்புகளுக்குமே பயந்திருந்தார் என ஹீன்ஹாமி கூறுகிறார்.

பயந்த நிலையிலும், பாதுகாப்பான இடமின்றி, ஹீன்ஹாமி தனது ஏழு மாதங்கள், மூன்று வயது மற்றும் ஐந்து வயது குழந்தைகளுடன் மூன்று மாதங்கள் காட்டில் தங்கியிருந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தனது கணவர் காணாமல் போனதாக அவர் புகார் அளிக்க முயன்றார். ஆனால் போலீசார் அதை ஏற்க மறுத்தனர். நீதிக்கான வழியின்றி, பல ஆண்டுகளுக்குப் பிறகு, ரூ. 50,000 இழப்பீட்டை கோருவதற்காக காவல்துறை அறிக்கையைப் பெற்றார்.